நடிகை காயத்ரிக்கு செக் மேட் வைத்த பிக் பாஸ் – இனி எப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்க போகிறார்..?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்பதை இன்று அல்லது நாளை கமல்ஹாசன் அறிவிப்பார் என்ற நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சக்தி வீட்டுக்கு கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் ரைசாவை தவிர அனைவருமே எவிக்சன் பட்டியலில் இருந்த நிலையில் பிக்பாஸ் நேற்று ஒரு டாஸ்க் மூலம் காயத்ரியை மட்டும் காப்பாற்றிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் காயத்ரியை அடுத்து குறைந்த வாக்குகள் பெற்ற சக்தி இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக ஆடியன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவலின்படி தெரிகிறது.

தற்போதைய நிலையில் காயத்ரிக்கு சக்தியை தவிர வேறு துணை இல்லை. ஆனால் தற்போது சக்தியும் வெளியேறிவிட்டால் காயத்ரி தனிமைப்படுத்தப்படுவார். பரணியும், ஓவியாவும் தனிமைப்படுத்தப்பட்ட போது பெற்ற வேதனை என்ன என்பதை காயத்ரி இனியாவது புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தனிமையின் கொடுமை காயத்ரிக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே நேற்று பிக்பாஸ் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் புதிய வரவுகள் இருக்கும் என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அந்த புதிய நபர் யார் என்பது இந்த நிமிடம் வரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி பிரபல தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்