பரணியா? ஓவியாவா? – யார் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்க்கு வரப்போகிறார்.! – பிக்பாஸ் பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. பிறகு வெளியேற்றப்பட்டார்.

முன்னதாக நடிகர் பரணி வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டு மன உழைச்சல் காரணமாக தானாக முன்வந்து வெளியே சென்றார்.

 

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீப்ரியா கமல்ஹாசனிடம் ஏன் இந்த வாரம் காயத்ரியை காப்பற்றினார்கள்? என்று கேட்டு கமல்ஹாசனை அதிர வைத்தார்.

இதற்கு பதிலளித்த பிக் பாஸ், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வெளியே அனுப்பப்படலாம். அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தால் கூட. அதே சமயம், வெளியேச சென்றவர்கள் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளவர்கள் எந்த நேரமும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றகலாம். ஆனால், இது தான் நடக்கும் என்று என்னால் உத்திர வாதம் தர முடியாது..! என்று கூறியுள்ளார் பிக் பாஸ்.

இந்நிலையில், பரணி அல்லது ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறதென்று.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்