விவேகம் – தமிழ்நாடு வியாபார நிலவரம் – துல்லியமான விபரங்கள்

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்-சிவா கூட்டணி இணைந்துள்ள படம் விவேகம். வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 34 கோடிக்குத் தான் விலைபோனது. வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 42 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டது. அதோடு, வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததால் படத்தை வாங்கியவர்கள் லாபம் சம்பாதித்தனர்.

இப்போது வேதாளம் படத்தைவிட சுமார் 12.5 கோடிக்கு கூடுதலாக பிசினஸ் ஆகியிருக்கிறது விவேகம். அதாவது விவேகம் படத்தின் தமிழக தியேட்டர்கள் உரிமை மட்டும் 54.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. விவேகம் ஏரியா வாரியாக என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரம்…

சென்னை சிட்டி – 5 கோடி

செங்கல்பட்டு – 11.50 கோடி
வட ஆற்காடு – 4 கோடி
தென் ஆற்காடு – 3.25 கோடி
மதுரை – 6.30 கோடி
சேலம் – 5.35 கோடி
கோவை – 9.30 கோடி
திருச்சி, தஞ்சாவூர் – 6.20 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி – 3.60 கோடி

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்