வனிதா விஜயகுமாரின் குழந்தை கடத்தல்? பரபரப்பு புகார்

தமிழ் திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார். இவர் மீது ஆந்திர போலீசார் குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

வனிதாவிற்கும் ஆனந்த்ராஜீவிற்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்துப் பெற்றனர்.

இந்த நிலையில் அவர்களது குழந்தை ஜெய்நிதா, ஆனந்த் ராஜீ வசம் இருக்க  வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஆனந்தராஜ் ஆந்திராவில் குடியேறினார். அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் சென்ற வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் ஜெய்நிதாவை ஆனந்த ராஜின் அனுமதி பெற்று அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் கொண்டு வந்து சேர்க்காததாலும், தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை என்ற காரணத்தாலும் ஆனந்த ராஜ் வனிதா மீது குழந்தையைக் கடத்தியதாக புகார் அளித்துள்ளார்.

அதன்படி ஆந்திரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்