இரத்தம் வழிய டப்பிங் பேசிய அஜித்- நெகிழ்ச்சியான நிகழ்வு

அஜித் தான் ஒரு கமிட்மெண்ட் கொடுத்துவிட்டால் அதை எப்படியும் முடித்துக்கொடுத்து விடுவார். தன் சொந்த பிரச்சனையை எப்போதும் சினிமாவிற்குள் கொண்டு வரமாட்டார்.

அப்படித்தான் அஜித் உன்னைத்தேடி படத்தில் நடிக்கும் போது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது, இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

உன்னைத்தேடி படப்பிடிப்பு முடிந்த அஜித் முதுகில் ஆப்ரேஷன் செய்துக்கொண்டார், அப்போது அவரால் எழுந்துக்கூட நடக்க முடியாது.

ஆனால், தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என, மருத்துவமனையிலிருந்து நேராக டப்பிங் ஸ்டூடியோவிற்கு சென்று டப்பிங் பேசினார்.

அப்போது அவரின் முதுகில் இருந்து இரத்தம் வழிய பலரும் வேண்டாம் என கூற, அஜித் அதை மறுத்து டப்பிங் பேசிக்கொடுத்து தான் சென்றுள்ளார்.

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்