சிம்புவை தாக்க வந்த குண்டர்கள்- பதற்றத்தில் டி.ஆர்

சிம்பு அண்மைகாலமாக மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். சமூக விஷயங்களில் அக்கறை காட்டுவது என சுறுசுறுப்பாக இருக்கிறார்.

ஆனால் படப்பிடிப்பு விஷயத்தில் மட்டும் சிம்பு மாறவே இல்லை. இதற்கு காரணம் பணம் தராமல் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அவர் நடித்துவரும் AAA படத்தின் தயாரிப்பாளருக்கும், சிம்புக்கும் ஏதோ வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமான தயாரிப்பாளர் சில குண்டர்களை சிம்பு வீட்டிற்கு அனுப்பி வைக்க பெரிய கலவரமே நடந்துள்ளது.

சிம்புவை தாக்க வந்த குண்டர்கள் மீது டி.ஆர். அவர்கள் போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

AAA பட தயாரிப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.கவில் இருந்து அதிமுகவுக்கு மாறியது மக்களுக்கு நினைவிருக்கலாம்.