மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு முடிவையும் தெளிவாக கூறவில்லை.

அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்த அவர், 2.0, ரஞ்சித்தின் அடுத்தப்படம் என பிஸியாக இருக்கின்றார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பாட்ஷா டிஜிட்டல் வெர்ஷன் மார்ச் 3ம் தேதி வெளிவருகிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

இதனால், ரஜினி ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர், பல திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்கள்.