மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த பிரபல நடிகர்

சென்னை: நடிகர் அசோக் செல்வன் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட மரண வாசலை தொட்டுவிட்டு வந்துள்ளார்.

தெகிடி புகழ் அசோக் செல்வன் மெட்ரோ பட புகழ் அனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துள்ளது.

இது குறித்து அசோக் செல்வன் கூறுகையில்,

கடலில் வரும் காட்சி ஒன்றை படமாக்கினோம். சென்னை கடலில் எண்ணெய் கலந்துவிட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் புதுச்சேரிக்கு சென்றோம்.

கடலில் வரும் காட்சி ஒன்றை படமாக்கினோம். சென்னை கடலில் எண்ணெய் கலந்துவிட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் புதுச்சேரிக்கு சென்றோம்.

இரண்டு மீனவர்கள், இயக்குனர் மற்றும் நான் படகில் கடலுக்கு சென்றோம். அந்த காட்சியை ஹெலிகேம் மூலம் படமாக்கினார்கள். கடலில் அலைகள் உயரமாக வந்ததால் மீனவர்கள் என்னை நினைத்து கவலைப்பட்டார்கள்.

நான் காட்சிப்படி கடலில் குதித்தேன். அப்பொழுது நான் நிறைய கடல் நீரை குடித்துவிட்டேன். ரீடேக் வாங்கியபோது அலைகள் என் தலையில் மோதின. படகு கட்டுப்பாட்டை இழந்து என் தலையில் மோத வந்தது.

படகு வருவதை பார்த்த நான் நீருக்குள் சென்றுவிட்டதால் தப்பித்தேன். நான் இறந்துவிடுவேன் என்று அங்கிருந்தவர்கள் நினைத்துள்ளனர். படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் ரொம்ப ஸ்பெஷல் என்று அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.