அரண்மனை போல வீடு, தன் அன்பு மகன் ஆத்விக்கு -அப்பா அஜித் பெருமிதம்!

அஜித் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். பிசியாக இருக்கும் அஜித், தன் மகன் ஆத்விக் பிறந்தபிறகு, ஒரு அழகான வீட்டை கட்ட முடிவு பண்ணினாராம்.

அதன்படி, திருவான்மியூரில் ஹைடெக்காக ஜிம் வசதிகள், பேட்மிண்டன் கோர்ட் வசதிகள், பிள்ளைகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு அரண்மனை போல ஒரு வீட்டை கட்டி கொண்டு உள்ளாராம்.

இப்போது தான் அவருடைய மனைவி ஷாலினி அந்த வீட்டை மேற்பார்வையிடும் ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. அஜித்தின் பிசியால், ஷாலினி இந்த வேலையே மேற்பார்வையிட்டு வருகிறார். கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பணிகள் முடிந்துள்ளன.
கூடிய விரைவில் தன் மகனின் 2 வது பிறந்த நாளுக்கு அங்கு, அஜித் குடும்பம் குடியேறும் என்று சொல்லப்படுகிறது.