ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார்.

இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், கீர்த்தி தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.