உங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா?: நடிகரை எச்சரித்த போலீஸ்

பெங்களூரு: தெற்கு பெங்களூரு போலீசார் நடிகர் துனியா விஜய்யை அழைத்து எச்சரித்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்க்கு நாகரத்னா, கீர்த்தி கவுடா என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவி 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

துனியா விஜய் தனது 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.

குடும்பத் தகராறு 
சண்டை

துனியா விஜய் வீட்டில் குடும்ப பிரச்சனையாக உள்ளது. முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிபுடி சண்டை நடந்து அது காவல் நிலையம் வரை சென்றது. அவர்கள் அடிக்கடி சண்டை போடுவதால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

 

கடுப்பு 
விஜய்

குடும்ப பிரச்சனை காரணமாக துனியா விஜய் வீட்டில் இருந்து ஒவ்வொருத்தராக சென்று போலீசில் புகார் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தெற்கு பெங்களூரு பகுதியின் டிசிபி அண்ணாமலை விஜய், கீர்த்தி மற்றும் அவரின் பெற்றோரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று விஜய்யை அவர் எச்சரித்துள்ளார். மேலும் ரூ. 5 லட்சத்திற்கு சூரிட்டி பாண்டும் அளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.

 

போலீஸ் 
புகார்

துனியா விஜய்யின் மனைவிகள் ஒருவர் மீது மற்றொருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். மேலும் விஜய்யின் மகள் மோனிகா தனது தந்தை, சித்தி ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். விஜய் தன்னுடைய 2வது மனைவியுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக மோனிகா புகார் தெரிவித்தார்.

 

வழக்கு 
குடும்பத்தார்

குடும்ப பிரச்சனையால் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது கிரிநகர் போலீசார் கடந்த 27ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகரில் அமைதியை காக்கும் வகையில் டிசிபி அண்ணாமலை பிறப்பித்த உத்தரவின்பேரில் விஜய் மற்றும் அவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.