விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர் ரசிகர்கள் கோபம்


தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் நடக்கின்றன. வெளியாவதற்கு முன் படம் குறித்து வெளியாகும் சில விஷயங்களால் ரசிகர்கள் பெரியதாக எதிர்ப்பார்த்துவிடுகின்றனர்.

அப்படி அஜித்-விஜய் என நிறைய நடிகர்களின் படங்களை கூறலாம். சமீபத்தில் அப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் என்றால் அஜித்தின் விவேகம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அதுதான் உண்மை.

சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான். அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு கண்ராவியும் இல்லை. படத்தில் அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் அனைவரும் இறக்கின்றனர். அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு அணியாயம் என்று பேசியுள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ