ஸ்ரீதேவி கணவரின் அவசரம்தான் சிக்கலில் சிக்க காரணமா அதிர்ச்சியாக்கிய தகவல்

அவர் தன்னுடைய அழகை மெருகேற்றிக் கொள்ளவும், இளமையான தோற்றத்துடன் வெளிப்படுத்திக்கொள்ள செய்துக்கொண்ட அறுவை சிகிச்சைகளும், எடுத்துக்கொண்ட மருந்துகளும் தான்.

இதை தொடர்ந்து நேற்று யாரும் எதிர்ப்பாராத நேரத்தில், நடிகை ஸ்ரீ தேவி, குடித்துவிட்டு நிலைத்தடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் என கூறப்பட்டது.

வலுத்த சந்தேகம்:


நடிகை ஸ்ரீ தேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான போது அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு வேலை சுய நினைவு இழக்கும் படி ஸ்ரீ தேவி குடித்திருந்தால் எப்படி 15 நிமிடம் போனி கபூரிடம் பேசி விட்டு இரவு உணவுக்கு தயாராக முடியும்… என பல்வேறு சந்தேகங்களை நேற்றே சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி வந்தனர்.

அவசரப்படுத்திய போனி கபூர்:

ஸ்ரீ தேவி மரணமடைந்ததும், உடனடியாக அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என போனி கபூர் அவசரப்படுத்தியுள்ளார். மற்ற நாடுகளை விட அதிக கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணையை கொண்ட துபாயில் உள்ள போலீசாருக்கு போனி கபூரின் இந்த அவசரம் தான் அதிக சந்தேகத்தை ஏற்ப்படுதியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தீவிர விசாரணையை துவங்கினர் துபாய் போலீசார்.


ஸ்ரீ தேவியின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதால் Dubai Public Prosecution-க்கு மாற்றி தற்போது விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

துபாய் அரசை பொறுத்த வரையில் இந்தியாவில் இருந்து செல்லும் பிரபலமாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருந்தாலும், மரணத்தில் எந்த சர்ச்சையையும் இல்லை என்றால் அனைத்து விதிமுறைகளும் முடித்து உடனடியாக உடல் இந்தியா அனுப்பப்படும். சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட தீவிர விசாரணைக்கு பின் தான் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து துபாய் அதிகாரிகள் விசாரணை செய்ததில் ஸ்ரீ தேவியின் மரணத்தில் மர்மம் இல்லை. போனி கபூர் அவசரத்திலும் அதிர்ச்சியிலும் இருந்ததால் முன்னுக்கு பின் பதில் அளித்தார் என தெளிவாக தெரிந்தபின்னர் தற்போது ஸ்ரீ தேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

மேலும் ஸ்ரீ தேவியின் உடல் இன்று இரவு மும்பைக்கு அம்பானியின் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.