சன்னி லியோன் இவ்வாறு செய்ய என்ன காரணம் இது உண்மையா பொய்யா

பாலிவுட்டில் சில படங்கள் பாடல்கள் என்று நடித்து வந்தவர் தான் சன்னி லியோன். தமிழில் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவரை இந்த படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்க காரணம் இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகம் என்பதால். இந்திய பிரபலமாக இவர் இருப்பதால் தான் ஒரே கதாநாயகியை வைத்து நான்கு மொழிகளிலும் படம் தயாரிக்க முடிகிறது என்று கூறினார் இந்த படத்தின் இயக்குனர்.

பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை 2.0 மற்றும் பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த தொழிநுட்பக் குழுவினரிடம் ஒப்படைத்துள்ளார்களாம். இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நவ்தீப் நடிக்கவிருப்பதாகவும், தற்போது தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான அளவில் தனது உடலமைப்பை கச்சிதமாக மாற்றும் வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

சன்னி லியோன் இவ்வாறு செய்ய என்ன காரணம்.? இது உண்மையா பொய்யா.?

அதைத்தொடர்ந்து, வீரமாதேவி என்று இந்த படத்திற்கு தமிழில் பெயர் வைத்துள்ளார்கள். படத்தின் தலைப்பை சுன்னி லியோனே அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்காக சன்னி பல பயிற்சிகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், இவர் தமிழ் மொழியை கற்று வருகிறாராம். தமிழ் படத்தில் நடிப்பதால் மட்டும் மொழியை கற்கவில்லையாம். புதிய மொழிகளை கற்பது இவருக்கு பிடிக்கும் என்பதால் மட்டுமே கற்றுக்கொள்கிறதாக கூறியுள்ளார் சன்னி லியோன்.