இப்படி செய்தால் தளபதி62 படத்திலிருந்து வெளியேறிவிடுவேன் ரகுல் பரீத் சிங் மிரட்டல்

சென்னை : ரகுல் பிரீத் சிங் கார்த்தி ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் செம ஹிட்டானதால் அடுத்தடுத்து தமிழில் கமிட் ஆகி வருகிறார் ரகுல் பிரீத் சிங்.

கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரகுல் தான் விஜய் 62 படத்திலும் முன்பு நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியானதால் கோபமாகி உள்ளார். எனது கேரக்டரை டம்மி ஆக்கினால் படத்திலிருந்து விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

ஸ்பைடர் 
ரகுல் பிரீத் சிங் .

'ஸ்பைடர்' படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சம் தொடும் என்று எதிர்பார்த்திருந்தார் ரகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த 'விஜய் 62' பட வாய்ப்பினை இழந்தார்.

 

இந்தியில் 
மார்க்கெட் சரிவு

'ஸ்பைடர்' படத்தின் தோல்வியால் தெலுங்கிலும் ரகுல் பிரீத் சிங்கின் மார்க்கெட் சரிந்தது. அதன் காரணமாக இந்தியில் 'அய்யாரி' படத்தில் கமிட்டாகி நடித்த அவர், தற்போது அஜய்தேவ்கன் நடிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.


ரகுல் பிரீத் சிங் மறுப்பு 
செகண்ட் ஹீரோயினா?

இந்த நிலையில், இந்தி, தமிழில் நடிக்கும் புதிய படங்களில் ரகுல் பிரீத் சிங் இரண்டாவது நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுல்பிரீத்சிங் உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.


என்னை டம்மி ஆக்கவில்லை 
முதன்மை ஹீரோயின்

'தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடித்தபோதும், அவர்களைக் காரணம் காட்டி எனது ரோலை டைரக்டர்கள் டம்மியாக்கவில்லை.' எனக் கூறியுள்ளார்.

 

ரகுல் பிரீத் சிங் கோபம் 
படத்திலிருந்து வெளியேறி விடுவேன்

'அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்தப் படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன்' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.