விஜய்க்கு மாஸ் படத்தை கொடுத்த இயக்குனருடன் கை கோர்க்கும் நடிகர் அஜித்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத ஒரு திரைப்படம் “போக்கிரி”. இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படம் 2006-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தை இயக்கியவர் பிரபுதேவா. இன்னும் சில வாரங்களில் சிறுத்தை சிவா – அஜித் இணையும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான பிரபு தேவா அஜித்-தை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாகவும், அஜித்தும் ஒகே சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அஜித் மற்றும் பிரபுதேவா அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வதால் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை பிரபுதேவா பெறுவார் என்று கூறுகிறார்கள்.