ரசிகர்களின் எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றியவர்கள் மத்தியில் விஜய் சற்றே வித்தியாசமானவர்

ரஜினி, கமலை தொடர்ந்து, நடிகர் விஜயும் தற்போது அரசியலில் குதிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

தமிழகத்தில் ஜெயாலலிதா மறைவுக்கு பின், முதல்வர் நாற்காலி மீது பலர் குறி வைத்துள்ளனர்.

குறிப்பாக திரையுலகினர் இடையே போட்டி கடுமையாக நிலவுகிறது . ரஜினி, கமல் என டாப் ஹீரோக்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்..

கமல்  அரசியலுக்கு வரும் முன்னரே பல விமர்சனங்களை முன் வைத்து பேசினார், ரஜினி அரசியலுக்கு வரும் முன்னரே கமல் வந்துவிட்டார்..

இதற்கிடையே விஷாலும், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு கொடுத்தார், ஜெயலலிதா இருந்திருந்தால், ரஜினி, கமல் முதலில் அரசியலில் இறங்கி இருப்பார்களா..?

பல முன்னணி ஹீரோக்கள் ஆர்வத்தோடு அரசியலில் ஈடுபட, தற்போது விஜய் அரசியலில் ஆர்வம் காட்ட  தொடங்கியுள்ளார், சத்தமே இல்லாது இணையதளம் ஒன்றை,  துவக்கி உள்ளார்.

'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரிலான அந்த இணையதளம் மூலம், ரஜினி ஸ்டைலில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.