வக்கிர எண்ணத்தோட தொட்டா அவங்க கையை வெட்டணும் அனுஷ்கா

பாலியல் தொல்லை கொடுக்கும் வக்கிரபுத்திக்காரர்களின் கைகளை வெட்ட வேண்டும் என நடிகை அனுஷ்கா  ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பெண்கள் அனைத்துத் துறைகளிலும், வக்கிர புத்தியுள்ள ஆண்களால் பாலியல் ரீதியாக துன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும், இந்தியாவில் 60 சதவீத பெண்கள் அவர்களின் குடும்ப உறுப்பிளர்களாலே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரங்கள் கூறுகிறது.

ஆனால் பல பெண்கள் பயந்து கொண்டு இதுகுறித்து வெளியில் சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசும் பல சட்டங்களை கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாலியல் நோக்கத்துடன் தொடும் ஆண்களின் கைகளை வெட்டி எறிய வேண்டும் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்

தமிழ், தெலுங்கு என திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை அனுஷ்கா, பாகுபலி-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகமதி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்கா கலந்துகொண்டு பேசுகையில், பெண்கள் அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர் என குறிப்பிட்டார்

பாகுபலி -2 படத்தில் என்னை தொடுபவரின் கையை நான் வெட்டி எறிவதுபோல் ஒரு காட்சி வரும், நிஜ வாழ்க்கையில் எந்தக் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கைகளை வெட்ட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

பெண்களை தவறான எண்ணத்தோடு தொடும் ஆண்களின் மனதில் உள்ள அகங்காரத்தை முதலில் ஒழிக்க வேண்டும் என்றும் அனுஷ்கா தெரிவித்தார்.

தோல்வி கொடுத்தும் ஏன் மறுபடியும் சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்தேன் அஜித்தே கூறிய பதில்