மைனா நந்தினிக்கு 2வது திருமணமா உண்மை என்ன

சென்னை: மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் என்று வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நந்தினி. விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து பிரபலமானார்.

அதில் இருந்து அவரை அனைவரும் மைனா நந்தினி என்று அழைக்கத் துவங்கினர்.

கணவர் 
தற்கொலை

நந்தின் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

நந்தினி 
புகார்

கார்த்திக் தற்கொலை செய்ய நந்தினி மற்றும் அவரது தந்தை கொடுத்த டார்ச்சர் காரணம் என்று கார்த்திக்கின் அம்மா புகார் தெரிவித்தார். இதை நந்தினி மறுத்தார்.


இரண்டாவது திருமணம் 
டான்ஸ் மாஸ்டர்

நந்தினிக்கும், டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.

 

தம்பி 
சிரிப்பு

எனக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தியை பார்த்து சிரிப்பு வந்தது. என் தம்பி ஒரு டான்ஸ் மாஸ்டர். அவனுடன் வெளியே சென்றது ஒரு குற்றமா. அக்கா, தம்பியை கூட இந்த சமூகம் இப்படி மோசமாக பார்க்கிறேதே என்று நந்தினி வருத்தப்பட்டுள்ளார்.

பல கோடிகளை ஆட்டை போட்ட தீபா அடுக்கடுக்காக குவியும் புகார்களால் பேஜாரான பேபிமா