என் மகன் மறுத்திருந்தால் நான் செய்திருப்பேன் ரசிகர்களை ஷாக் ஆக்கிய விக்ரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.தமிழில் இந்த படத்திற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், நடிகர் விக்ரம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரம் கூறியதாவது, ” அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குனர் கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. என் மகன் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் நான் நடித்திருப்பேன்” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க இளமையான கதாநாயகன் தான் சரியான பொருத்தமாக இருப்பார். ஆனாலும், என்னால் நடிக்கக் முடியும் என்று விக்ரம் கூறியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதனை கேட்ட விக்ரம் ரசிகர்கள் சியான்-னா சும்மாவா..! என்று கூறிவருகிறார்கள்.

நாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியை கைது பண்ணனும் விடுதலைத் தமிழ் புலிகள்