நாங்க 5 பேர் உன்னை மாத்தி மாத்தி யூஸ் பண்ணுவோம் நடிகையிடம் கூறிய பிரபல தமிழ் தயாரிப்பாளர்

ஹைதராபாத்: படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை திட்டியதால் தனக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

நெருங்கி வா முத்தமிடாதே படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்ருதி ஹரிஹரன். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,

என் 18 வயதில் முதல் கன்னட படத்தில் நடிக்கும்போது படுக்கைக்கு அழைத்தார்கள். இது குறித்து என் டான்ஸ் மாஸ்டரிடம் கூறியதற்கு அவரோ உன்னால் இந்த சூழலை கையாள முடியவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகிடு என்றார்.

தமிழ் சினிமா துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார். தமிழிலும் நான் கன்னடத்தில் நடித்த கதாபாத்திரத்தையே தருகிறேன் என்றார் அவர்.

நாங்கள் 5 தயாரிப்பாளர்கள் உள்ளோம். உன்னை எங்கள் விருப்பப்படி மாத்தி மாத்தி பயன்படுத்திக் கொள்வோம் என்று அந்த பிரபல தயாரிப்பாளர் என்னிடம் தெரிவித்தார்.

நான் எப்பொழுதும் கையில் செருப்புடன் தான் இருப்பேன் என்று நான் அந்த பிரபல தயாரிப்பாளரிடம் தெரிவித்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு தமிழ் பட வாய்ப்புகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது.

ஸ்ருதியுடன் பணியாற்றுவது கஷ்டம் என்று வதந்தி பரவியது. அந்த தயாரிப்பாளரிடம் உண்மையாகவே அப்படி சொன்னாயா என்று எனக்கு தெரிந்த பல தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்டனர். ஆமாம் என்றேன். அதில் இருந்து எனக்கு தமிழ் படங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்றார் ஸ்ருதி.

நித்யானந்தா ஆசிரமத்தில் உண்மையிலேயே என்ன நடக்குது தெரியுமா