நல்லா தான்யா கெளப்புறாங்க பீதியை தமன்னா ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு

சென்னை: நேற்று வெளியான ஒரு செய்தியை பார்த்துவிட்டு தமன்னா ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுத்திருச்சு.

தமன்னா தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளார். முதல் முறையாக மராத்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராம் குமார் ஷெக்டே இயக்கும் அந்த மராத்தி படத்திற்கு ஏ.பி.சி. என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் தமன்னா ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.

சவுந்தர்ராஜா 
ஹீரோ

சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன் உள்ளிட சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த சவுந்தர்ராஜா பின்னர் ஹீராவானார். போராடி முன்னுக்கு வந்துள்ள அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தமன்னா 
நிச்சயதார்த்தம்

சவுந்தர்ராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தமன்னாவுடன் சவுந்தர்ராஜாவுக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்த தமன்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

திடீர் 
ரசிகர்கள்

சொல்லாமல் கொள்ளாமல் தமன்னாவுக்கு நிச்சயதார்த்தமா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது வேறு தமன்னா என்று தெரிந்த பிறகே நிம்மதி அடைந்தனர்.


விஜயகாந்த் 
சரிதா

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் உள்ள யாரோ ஒரு விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அவரது காதலி சரிதா தர்ணா போராட்டம் நடத்தினார். விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு சரிதா தர்ணா என்ற செய்தியை பார்த்து அப்போதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எல்லாம் பெயர் படுத்தும்பாடு பாஸ்.

இந்த நாள் நயன்தாரா துணிந்து வெளியே வந்த அந்த நாள்