நிர்வாண போட்டோஷூட் நடத்திய பிரபல டிவி நடிகர் சக நடிகர்கள் அதிர்ச்சி

மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அங்கத் ஹசிஜா நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அங்கத் ஹசிஜா(33). சப்னா பாபுல் கா..பிதாய் தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அங்கத் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் துணிச்சலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அங்கத் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

தான் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்து தனது குடும்பத்தாரும், நண்பர்களும், சக கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் அங்கத்.

நிர்வாணமாக போட்டோஷூட் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று குடும்பத்தாரும், நண்பர்களும் கேட்டனர். பாலிவுட் ஸ்டார்கள் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துகிறார்கள். அப்படி இருக்க டிவி ஸ்டார்கள் ஏன் கூடாது என்று கேட்கிறார் அங்கத்.

முன்னதாக அவர் கடந்த மாதம் பாத்டப்பில் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையையோ, சின்னத்திரை பிரபலங்களையோ சாதாரணமாக நினைக்காதீர்கள். தற்போது பெரிய திரையுலகில் பெரிய ஆட்களாக இருப்பவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள், படங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்று அங்கத் தெரிவித்தார்.

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளை விளாசிய விஷால்