விஜே அஞ்சனா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை : சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி அஞ்சனாவின் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அஞ்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அழகிற்காகவே அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது இனி தான் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாக அஞ்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி 
அஞ்சனா

சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா. அவரது தமிழ் உச்சரிப்பு, இனிமையான பேச்சு காரணமாக அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமே இருக்கிறது.


திருமணம் 
கயல் சந்திரனுடன் திருமணம்

சேனல் மட்டுமின்றி பல்வேறு ஷோக்களிலும் பங்களித்து வந்த அஞ்சனாவுக்கும், பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமான சந்திரனுக்கும் காதல் ஏற்பட்டு, சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

ரசிகர்கள் கேள்வி

திருமணத்திற்கு பிறகும் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன் என்று கூறி வந்தார். தற்போது அவர் தொகுத்து வழங்கிய அந்த பிரபலமான நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அவர் தொகுத்த லைவ் ஷோவில் இருந்தும் விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

சன் மியூசிக்கை விட்டு விலகும் அஞ்சனா 
அஞ்சனா விலகல்

தற்போது இனி தான் 10 வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கிய லைவ் ஷோவை விட்டு வெளியேறவுள்ளதாகவும், இதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பிரேக் எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் அஞ்சனா.


பிரபலங்கள் வாழ்த்து 
மிஸ் யூ அஞ்சனா

தொகுப்பாளினி அஞ்சனா சன் மியூசிக்கிலிருந்து விலகுவதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை அதிகமாக மிஸ் பண்ணப்போவதாக ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவரது அடுத்தக்கட்ட நகர்வுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து அதிரடியை கிளப்பிய அம்ருதா அதிர்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனை