விக்னேஷ்சிவன் என்னை நைட்டு கூப்பிட்டார் அதிர வைத்த புதுமுக நடிகை

இன்றைய தேதியில் கோலிவுட்டில் பரபரப்பான தயாரிப்பாளர் யார் என்றால் ஸ்டுடியோக்ரீன் கே.இ.ஞானவேல்ராஜாதான்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த வாரம் வெளியானது.

இதையடுத்து அனுஷ்கா நடித்த பாகமதி தெலுங்குப்படத்தின் தமிழ்ப்பதிப்பை வெளியிடுகிறார்.

ஹர ஹர மஹாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சக்சஸ்மீட், கஜினிகாந்த் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியீடு, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியீடு, பாகமதி படத்தின் இசைவெளியீடு என 4 இன் 1 விழாவை நடத்தினார்.

இந்த விழாவின் ஒரு அங்கமான தானா சேரந்த கூட்டம் படத்தின் சக்சஸ்மீட்டில், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரான நடிகையும் மாடலுமான மீரா மிதுனிடம், நிகழ்ச்சித்தொகுப்பாளரான விக்னேஷ்காந்த் என்பவர், உங்களுக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்று கேட்டார்.

"டைரக்டர் விக்னேஷ்சிவன் ஒருநாள் நைட்டு என்னை கூப்பிட்டார்" என்று தொடங்கி தனக்கு வாய்ப்புகிடைத்த கதையை சொல்லத்தொடங்க, நைட்டு என்னை கூப்பிட்டார் என்பதற்கான வேறு அர்த்தத்தை புரிந்து கொண்டு அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

நிகழ்ச்சித்தொகுப்பாளரும் அதே அர்த்தத்தில் மீரா மிதுனிடம் உரையாடலைத் தொடர, சட்டென சுதாரித்துக் கொண்டார் மீரா.

இது பாலியல் பாகுபாடு (Gender bias) என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார்.

சிரித்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் வாய்கள் மூட சற்று நேரம் பிடித்தது

பேஸ்புக் வாட்ஸ் ஆப்பை இனி மனதின் மூலம் இயக்கலாம் தெறிக்கவிடும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம்