அஜித்திடம் இருந்து நான் இதைத்தான் கற்றுக்கொண்டேன் பிரபல நடிகை பேட்டி

அஜித்குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் கூறிய கருத்துகளை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில், நடிகர் அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கை வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்வேதா. சினிமா மட்டுமின்றி சீரியல், தொகுப்பாளினி என கலக்கி வருகிறார் இவர்.

இந்நிலையில், நடிகர் அஜித் குறித்து ஒரு பேட்டியில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ” அஜித் சார் செட்டுக்கு வந்துட்டார்னா, அங்க இருக்க எல்லோருக்கும் பணிவாக வணக்கம் சொல்லுவார். அதில், சின்னவங்க , பெரியவங்க என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. எல்லோரையும் எப்படி சமமாக மதிக்க வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்”. என்று கூறியுள்ளார் ஸ்வேதா.

இயக்குனர் மோகன்ராஜா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான் எகிறிய எதிர்பார்ப்பு