வாடகை பெற்றோர் ஆடம்பர அபார்ட்மெண்ட் ஆண்களை மயக்கி பல லட்சம் ஆட்டையப் போட்ட

திருமண ஆசை காட்டி பல இன்ஜினியர்களுக்கு வலை விரித்து அவர்களிடம் நன்றாகப் பேசி, பணம் பறித்து ஏமாற்றி வந்த புதுமுக நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்ந்து பல இன்ஜினியர்கள் வாழ்க்கையில் விளையாடி வந்த சுருதி என்கிற பெண், ஒரு புதுமுக நடிகை என்பதுதான் ஆச்சரியமான தகவல். 'ஆடி போனா ஆவணி' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் சுருதி, தொடர்ந்து பலரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

 

இவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த வாடகை பெற்றோர், சித்ரா மற்றும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களைப் பற்றி போலீசார் கூறியபோது, இணையதளத்தில் திருமணத்திற்காக பெண் தேடும் வசதி படைத்த 'இன்ஜினியர்களைக் குறிவைத்து சுருதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், மேலும் இவர் கோவையில் ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என நாடகமாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் பரமத்தி வேலுரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சந்தோஷ் குமார் இவர்களிடம் 43 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். அதே போல் சிதம்பரத்தைச் சேர்ந்த அருள்குமரன், சந்தோஷ் குமார் என இவர்களின் பண மோசடியில் சிக்கியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்களை போலீசார் தேடி வந்துள்ளனர் ஆனால் இவர்கள் அப்போது முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். இப்போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

இவர்கள் எத்தனை பேரிடம் இப்படி இதுவரை ஏமாற்றி உள்ளனர் என்று தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை இப்படி ஒரு மோசடி செயலில் ஈடுபட்டது கோலிவுட் வட்டாரத்தையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது.

தல வீட்டு கதவை தட்டிய பி.வி.சிந்து ராஜ மரியாதை கொடுத்த அஜித்