உண்மையில் ரஜினி இணையத்தில் பதிவிட்டது எத்தனை பேர் திடுக்கிடும் புள்ளிவிவரம்

சென்னை: ரஜினி தனது அரசியல் செயல்பாடுகளுக்காக புதிய இணையதளம் தொடங்கி இருக்கிறார். அதேபோல் ரஜினி மன்றம் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதில் அவரது ரசிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அவரது தீவிர தொண்டர்களும் இந்த இணையத்தில் தங்களை இணைத்து உள்ளனர்.

இந்த இணையம் குறித்து சில உண்மைகளும், அதை எவ்வளவு மக்கள் தினமும் பார்க்கிறார்கள் என்ற தகவலும் வெளியே வந்து இருக்கிறது.

ரஜினியின் 'www.rajinimandram.org' என்படும் 'ரஜினி மன்றம்' என்ற இணையதளம் தற்போது இந்தியா முழுக்க வைரலாக இருக்கிறது. பலரும் இதுகுறித்து பேசினார்கள். அதே சமயத்தில் அவர் வெளியிட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனும் நல்ல பேமஸ் ஆகி இருக்கிறது.

 

ரஜினி ரசிகர்களின் பேஸ்புக் கணக்கு படி இதுவரை அந்த இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் மூலமாக 50 லட்சம் பேர் அவர் மன்றத்தில் இணைந்து இருக்கிறார்கள். 4 நாள் கணக்கு படி பார்த்தால் ஒருநாளைக்கு குறைந்தது 15 லட்சம் பேர் சென்று அந்த இணையதளத்தை பார்த்துள்ளனர். இது கண்டிப்பாக 15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சராசரியாக ஒருநாளைக்கு 10 லட்சம் பேர் தங்களை மன்றத்தில் இணைத்தார்கள் என்று கூறமுடியும்.

 

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ரஜினி மன்றம் அப்ளிகேஷன் மூலமாகவும் இதுவரை நிறைய பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துதான் 50 லட்சம் என்ற கணக்கு வந்து இருக்கிறது. முதலில் இந்த அப்ளிகேஷன் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டாலும் பின் பலர் அதை டவுன்லோட் செய்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷனை நேற்று இரவு கணக்குப்படி 1 லட்சம் பேர் மட்டுமே டவுண் லோட் செய்து உள்ளனர். மேலும் கூகுள் டிராபிக் மற்றும் அமேசான் டிராபிக் படி ரஜினியின் இணையதளம் இந்திய அளவில் 4,648வது இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. ஒருநாளைக்கு 5 லட்சத்திற்கும் குறைவான பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே இவ்வளவு பின்தங்க முடியும்.

எனவே ஒருநாளைக்கு 3-5 லட்சம் பேர் தங்களை பதிவு செய்தார்கள் என்று வைத்தால் கூட 50 லட்சம் பேர் கண்டிப்பாக பதிவு செய்து இருக்க முடியாது. இந்த கணக்குப்படி மொத்தமாக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10 -15 லட்சம் கூட இருக்க முடியாது. எப்படி குட்டி கழித்து பார்த்தாலும் கணக்கும் சரியாக வரவில்லை.

எந்த வயசுல நம்ம நடிகை, நடிகர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் தெரியுமா