நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி திடுக் தகவலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான “வேலைக்காரன்” திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரபல தொலைகாட்சிக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் திடுக்கிட வைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, யார் மீது வியாபாரம் அதிகமாக உள்ளதோ அவர்களை சுற்றித்தான் சினிமாவின் முக்கிய வியாபாரம் உள்ளது. அப்படியான நடிகர்களின் படங்கள் தான் திரையுலகின் பணப்புழக்கத்தின் முக்கியமான பங்காக பார்க்கப்படுகிறது.

இதை வைத்து தான் சின்ன சின்ன படங்களின் வியாபாரமும் இருக்கிறது. ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஏன் தயாரிப்பாளர்கள் வட்டி விகிதம் குறைக்க சொல்ல முன்வரவில்லை…? அதையும் மீறி படம் நஷ்டம் அடைந்தால் பல நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஈடு செய்து தருகிறார்கள்..! அதை பற்றிய தகவல் எதுவுமே வெளியே வருவதில்லை. அவை அப்படியே மூடி மறைக்கப்படுகின்றன என்பது தான் உண்மை என திடுக்கிட வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ரஜினி கட்சி ஆரம்பிச்சத பாத்து மத்த கட்சிகளுக்கு பயமா இருக்கலாம் அந்த ரஜினிக்கே பயம் காட்டுவது