பேட்ட படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா.? – வடசென்னை-கே டஃப் கொடுப்பாங்க போல..!

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் – சிம்ரன் இடம்பெற்றிருக்கும் புதிய புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் பாடல்களை வெளியிட்டிருந்தனர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் த்ரிஷா சரோ என்ற கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் சிங்கார் சின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மாலிக் என்ற கதாபாத்திரத்தில் சசிக்குமாரும், மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர்.

படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் இருந்த நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பார்க்கும் போது தனுஷ்-ன் வடசென்னை படத்தை போல வசனங்களை வைதுள்ளர்களோ என்ற எண்ணம் வருகின்றது.

1. முதல் ரீலில் “ஆட்ட முடியாது” மற்றும் “ஓத்தா” என்ற வார்த்தை Mute செய்யபட்டுள்ளது.

2.மூன்றாவது ரீலில் “சூத்தனுட்டு” என்ற வார்த்தை Mute செய்யப்பட்டுள்ளது.

3.ஐந்தாவது ரீலில் “முண்டைக்கேவா” மற்றும் “முண்ட” என்ற வார்த்தைகள் Mute .செய்யப்பட்டுள்ளது

4.ஏழாவது ரீலில் “மக்குக்கூ*” என்ற வார்த்தையில் “கூ*” என்ற வார்த்தை Mute செய்யப்பட்டுள்ளது.

5. ஏழாவது ரீலில் இடம் பெரும் சண்டை காட்சி துப்பாக்கியில் சுடும் காட்சி சுருக்கபட்டுள்ளது.

6.எட்டாவது ரீலில் இரத்தம் தெரியும் காட்சிகளில் ரத்தத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.