பிரபல பத்திரிக்கை மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள் காரணம் இது தான்

அஜித் சினிமாவில் நடிப்பதை தாண்டி எந்த ஒரு விஷத்திலும் கலந்துகொள்ள மாட்டார். இதனால் அவர் மீது கோபத்தில் இருப்பவர்கள் பலர், அதனாலேயே அவரை பற்றி தவறான தகவல்களை வெளியே பரப்பிவிடுவர்.

இப்போது பத்திரிக்கையில் ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது தன்னை பற்றி செய்திகள் இணையதளங்களில் உடனுக்குடன் வரவேண்டும் என்பதற்காகவே தனி சம்பளம் கொடுத்து ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

தன்னை பற்றி எதிர்தரப்பு கிண்டல் அடித்தால் அந்த குழு தக்க பதிலடி தருமாம் என்று அந்த செய்தியில் உள்ளது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.