விஜய் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவியின் மகள்

மும்பை: ஜான்வி கபூரின் கவனத்தை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது தாய் வழியில் நடிகையாகிவிட்டார். தடக் படத்தை அடுத்து அவர் கரண் ஜோஹாரின் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனது அண்ணன் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

விஜய் தேவரகொண்டா 
ஜான்வி

ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போது யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்று கரண் ஜோஹார் ஜான்வியிடம் கேட்டார். அதற்கு அவர் விஜய் தேவரகொண்டாவாக எழுந்து ஜான்வியுடன் படம் பண்ண விரும்புகிறேன் என்று பதில் அளித்தார். ஜோடிப் பொருத்தம் நன்றாக தான் இருக்கும்.

கரண் 
ஹீரோ

யார் இந்த விஜய் தேவரகொண்டா என்று நினைத்தால் அவர் தான் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோ. தற்போது இந்தியில் ரீமேக்காகும் அந்த படத்தில் ஷாஹித் கபூர் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா செக்சியான தென்னிந்திய நடிகர் என்று கரண் ஜோஹார் பாலிவுட் ரசிகர்களுக்கு தெரிவித்தார். இதை கேட்ட ஜான்வியோ, அவர் மிகவும் திறமையானவரும் கூட என்று கூறினார்.

 

தெலுங்கு 
அறிமுகம்

ஜான்வி கபூர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜான்வி காபி வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவை புகழ்ந்துள்ளார். ஜான்வி பேசியதை பார்த்த உடன் அவர் விஜய்க்கு ஜோடியாகப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. தன் அம்மாவை போன்றே தெலுங்கு படங்களிலும் நடிப்பாரா ஜான்வி?

 

புதுப்படம் 
பேச்சுவார்த்தை

விஜய் தேவரகொண்டா மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எதுவும் முடிவாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.