தல 59 பிங்க் படத்தின் ரீமேக்கா இல்லையா?: அப்டேட் இதோ

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் விபரம் தெரிய வந்துள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். தேசிய விருது வாங்கிய இந்தி படமான பிங்கின் தமிழ் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கப் போகிறார்.

அஜித், வினோத் இணையும் படம் பிங்க் ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது.

அஜித் 
பிங்க்

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் அஜித் நடிக்கிறார். ஆனால் படத்தை காட்சி வாரியாக அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் வினோத். படத்தை எடுத்த பிறகு அதை பிங்க் படத்தின் தயாரிப்பாளர் சூஜித் சர்காருக்கு போட்டுக் காட்ட உள்ளார்களாம்.

டாப்ஸி 
தமிழ்

இந்தியில் டாப்ஸி தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டினார்கள். தமிழிலும் டாப்ஸியையே நடிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டாப்ஸி ஏற்கனவே அஜித் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வாசம் 
தல படம்

விஸ்வாசம் பட அப்டேட் கிடைக்காதா என்று தல ரசிகர்கள் ஏங்கிய நிலையில் அவரின் அடுத்த பட அப்டேட்டும் கிடைத்துள்ளது. இதற்கிடையே முன்னறிவிப்பு இன்றி வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டர் அதிகம் விரும்பப்பட்ட இந்திய பட மோஷன் போஸ்டராகியுள்ளது. பேட்ட, ஆமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தானை எல்லாம் முந்தியுள்ளது.

 

விமானம் 
ஜெர்மனி

கோவாவில் இருந்து சென்னை திரும்பிய அஜித் உடனே தனியாக வெளிநாட்டிற்கு கிளம்பினார். அவர் ஏரோ மாடலிங் தொடர்பாக ஜெர்மனி சென்றுள்ளார். ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.