எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு.. விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு?

சென்னை: 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதன் ஆரம்ப வரிகள், "எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு" என அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சில ஆண்டுகள் சிம்பு படங்களே ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இடையில் நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வளைய வருகிறார் சிம்பு.

புதிய படம்: 
வந்தா ராஜாவாத்தான் வருவேன்:

அதில் ஒன்று தான், சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படம். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' படம் தான் தமிழில் இப்பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தின் டிரெய்லர் ரஜினியின் 2.0வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புகார்: 
நஷ்ட ஈடு:

இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரம் தொடர்பாக, அப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். சிம்பு தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

 

விமர்சனம்: 
ரெட் கார்டு:

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சிம்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக சிம்புவிற்கு ரெட் கார்டு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

 

எனக்கா ரெட் கார்டு: 
சிங்கிள் டிராக்:

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார் சிம்பு. அதில், "எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு" என வரிகள் வருகின்றன. இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.


விஷால்: 
விஷால் ரசிகர்கள்:

இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விஷால் ரசிகர்கள் என்ன பதிலடி தரப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.