விஸ்வாசம் அப்டேட்டை மறைமுகமாக தெரிவித்த தயாரிப்பு நிறுவன பதில்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் நடந்தது. கிராமத்துக்கதையான விஸ்வாசம் படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 2 போஸ்டர்கள் மட்டுமே விஸ்வாசம் தொடர்பாக வெளியாகி உள்ளது. வேறு எந்த ஒரு அப்பேட்டும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனிடையே எங்களுக்கு அப்டேட் வந்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ கஜா புயலால் மக்கள் கஷ்டப்படுவதால் இப்போதைக்கு எந்த அப்டேட்டும் வெளியிட தயாராக இல்லையாம்.