திருமணத்தை அறிவித்தார் நயன்தாரா – நண்பர்கள் கொண்டாட்டம்

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது.

இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை.

தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நயன்தாரா கூறிவிடுவார்.

ஆனால் இருவரும் இணைந்து பல் நாடுகளுக்குப் பயணம் செய்வார்கள். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவர்களே வெளியிடுவார்கள்.

இந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி சென்னையிலுள்ள நட்சத்திரவிடுதி ஒன்றிற்கு நெருக்கமான நண்பர்களை அழைத்திருக்கிறது இந்த இணை.

மிக நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்ட அவ்விருந்தின்போது, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அதற்காக உங்களுக்கு இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று சொன்னார்களாம்.

முதன்முறையாக திருமண அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுஇருக்கிறார்கள் என்று திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.