சரக்கை வாயில் ஊற்றி கற்பழித்த பிரபல நடிகர்! பெண் இயக்குனர் பரபரப்பு புகார்!

பிரபல இந்தி நடிகர் அலோக்நாத். இவர் ஏராளமான படங்களில் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அலோக் நாத் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தி பட பெண் இயக்குனர் வின்டா நந்தா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது...

 

 

என் நெருங்கிய தோழியின் கணவராகஇருக்கும் அந்த நடிகருக்கு, நான் தயாரித்த 'தாரா' என்ற டிவி தொடரின் நாயகி மீது ஆசை ஏற்பட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.குடித்து விட்டு படப்பிடிப்பு அரங்குக்குள் வந்து கதாநாயகி மீது விழுந்தார். அந்த நடிகை அவரை ஓங்கி அறைவிட்டார். இதனால் படப்பிடிப்பில் இருந்து அவரை வெளியேற்றினோம்.

 

 

ஒரு நாள் எனது தோழி ஊரில் இல்லாதபோது அந்த நடிகர் என்னை விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்தார். நான் அருந்திய மதுவில் ஏதோ கலக்கப்பட்டு இருந்தது. என்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி சென்றார். அதன் பிறகு சுயநினைவு இல்லை. எனது வாயில் மது ஊற்றப்படுவதை உணர்ந்தேன்.

 

 

மறுநாள் மதியம் கண்விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொடுமையை வெளியே சொல்ல இதனை நாள் காத்திருந்தேன் என்றும் தன்னை போல் பாதிக்கட்ட பெண்கள் தைரியமாக பெயரை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் வின்டா நந்தா இந்த நடிகரின் பெயரை வெளியிடாமல் ஒரு சில குறிப்புகள் மட்டுமே கூறி இருந்தார். அதனை வைத்து அவர் நடிகர் அலோநாத்தை தான் கூறி கூறினார் என கண்டுபிடித்துவிட்டனர் ரசிகர்கள்.