தீபாவளிக்கு இதில் ஒரு படம் தான் வெளியாகும் – பிரபல திரையரங்க உரிமையாளர் தகவல்

கடந்த  வருட தீபாவளி எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த வருட தீபாவளி தான் தமிழ் சினிமாவில் அதிரடி சரவெடியாக இருக்கப்போகிறது.

ஏனெனில் அஜித்தின் விசுவாசம், விஜய்யின் 62வது படம், சூர்யா-செல்வராகவன் படம் என மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அந்தந்த படக்குழு அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த தீபாவளிக்கு ஏதாவது ஒரு படம் தான் வெளியாகும். அப்படி ரிலீஸ் ஆனால் தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கம் அதோடு ரசிகர்களுக்கும் நல்லது என்று கூறியுள்ளார் ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண்.