மன்னிச்சுடுங்க பப்ளிக்கா சாரி கேட்ட விக்னேஷ் சிவன்

சென்னை: பப்ளிக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த மாதம் ரிலீஸானது. இந்நிலையில் ஒருவர் கடந்த மாதம் வெளியான எந்த படமும் ஹிட்டாகவில்லை என்று ட்வீட்டினார்.

அதை பார்த்த விக்னேஷ் சிவனுக்கு கோபம் வந்துவிட்டது.

திட்டு 
மோதல்

ஜனவரியில் எந்த படமும் ஹிட்டாகவில்லை என்று கூறியவரை விக்னேஷ் சிவன் ட்வீட் மேல் ட்வீட் போட்டு விளாசித் தள்ளினார். அதில் சில ட்வீட்டுகளை நீக்கியும் விட்டார்.

இயக்குனர் 
கோபம்

விமர்சனம் எழுந்தால் அதை பார்த்துவிட்டு இப்படியா கோபப்படுவது. விமர்சனங்களை எப்படி சமாளிப்பது என்று இயக்குனர் ஷங்கர் ஏன் அட்லீயிடம் இருந்து கூட கற்றுக் கொள்ளுங்கள் என்றனர் நெட்டிசன்கள்.


மன்னிப்பு 
விக்னேஷ் சிவன்

நெகட்டிவாக பேசினால் இனிமேல் ரியாக்ட் செய்ய மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். கோபப்பட்டுவிட்டேன். நீங்கள் எனக்கு அன்பான இயக்குனர் என்ற பெயர் கொடுத்தீர்கள் என்று ட்வீட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.


சிவகார்த்திகேயன் 
சூர்யா

விக்னேஷ் சிவன் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க உள்ளார். இந்நிலையில் மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து படம் பண்ணுமாறு அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.