தோல்வியடைந்தாலும் சிவாவுடன் கூட்டணி ஏன் அஜித் சொன்ன அந்தக் காரணம்

சென்னை : அஜித், சிவா கூட்டணியில் 'வீரம்', 'வேதாளம்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களுக்குப் பிறகு அஜித்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமானார்கள்.

அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த 'விவேகம்' திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அப்படியிருந்தும் அஜித் நான்காவது முறையாக சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதற்கு அஜித் சொன்ன காரணம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

'வீரம்', 'வேதாளம்', ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் மூன்றாவது முறையாக 'விவேகம்' படத்திற்காக இணைந்த அஜித் - சிவா கூட்டணியை ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடினர். 'விவேகம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது

கடந்த ஆண்டு வெளிவந்த 'விவேகம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், சிவா மீது அதிருப்தியில் இருந்தனர் அஜித் ரசிகர்கள். அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கக்கூடாது எனக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

ஆனால், ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக நான்காவது முறையாக இணைந்தது அஜித் - சிவா கூட்டணி. இருவரும் இணையும் இப்படத்திற்கு 'விசுவாசம்' என டைட்டில் வைக்கப்பட்டது. ரசிகர்களின் கருத்துகளுக்கு அஜித் மதிப்புக் கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து அஜித் தன் நட்பு வட்டாரத்தில் கூறுகையில் 'சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அவர் வேறு ஒருவருடன் படம் இயக்கச் செல்லும் போது ஹிட் இயக்குனர் என்ற பெயரோடு தான் செல்ல வேண்டும். அதற்காகத் தான் இந்த வாய்ப்பு' என்று கூறினாராம்.

பல கட்ட கதைப் பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் சிவாவை கமிட் செய்துள்ளாராம் அஜித். அஜித் மீண்டும் ஏன் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் என அதிருப்தியுடன் இருந்தவர்களுக்கு அஜித் சொன்ன காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா