விக்னேஷ் சிவனுமா உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே விஷால்

சென்னை: விஷாலை விட்டுவிட்டு தமிழ் ராக்கர்ஸை தயவை நாடும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

புதுப் படங்கள் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. தமிழ் ராக்கர்ஸை ஒழித்துக் காட்டுவேன் என்று சவால் விட்ட விஷால் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குனர்கள் ஒவ்வொருவராக தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.

மோகன்ராஜா 
வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை வெளியிடும் முன்பு இயக்குனர் மோகன்ராஜா தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்தார். அதை பார்த்தும் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நெட்டிசன்ஸ் கலாய்த்தனர்.

விக்னேஷ் சிவன் 
கோரிக்கை

உங்களுக்கு இதயம் இருந்தால் அதை பயன்படுத்துங்கள் தமிழ் ராக்கர்ஸ் குழு. தயவு செய்து தானா சேர்ந்த கூட்டத்தை ரிலீஸ் செய்து விடாதீர்கள் என்று விக்னேஷ் சிவனும் தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


விஷால் 
சவால்

தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை கண்டுபிடித்து ஆறு மாதத்திற்குள் சிறையில் தள்ளுவேன் என்று வீராப்பாக சவால் விட்டார் விஷால். அந்த சவாலை அவர் மறந்துவிட்டார் போன்று.

நம்பிக்கை 
தமிழ் ராக்கர்ஸ்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிருப்தி அடைந்துள்ளதையே அவர்கள் தமிழ் ராக்கர்ஸின் தயவை நாடுவது தெளிவுபடுத்துகிறது.

நான் இனவாதி அல்ல ஊடகவியலாளர்களுக்கு டிரம்ப் தெரிவிப்பு