ஆடைகளில் இந்த ப்ராண்ட் தான் அஜித்தின் ஃபேவரைட் சொல்கிறார் ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன்

உலகம் முழுதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் அஜித். இவரை பற்றி இவருடன் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் என்ன கூறுகிறார்கள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. கூடுமானவரை, அப்படியான செய்திகளை நாம் பார்த்து விட்டோம்.

தற்போது, அஜித்தின் அபிமான ஆடை வடிவமைப்பாளரும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் மனைவியுமான அனுவர்தன் அஜித்திற்கு பிரியாமண ஆடைகள் என்னென்ன என்ற சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” அஜித்திற்கு எப்போதுமே கிராண்டான ஆடைகள் என்றால் பிடிக்கவே பிடிக்காது, எப்போதுமே சிம்பிளான ஆடைகளையே விரும்பி அணிவார். அதிலும், டெனிம் டீ சர்ட் என்றால் அஜித்திற்கு மிகவும் பிடிக்கும். ப்ளாக் கலர் அஜித்தின் விருப்பமான நிறம். கோட் ஷூட் எல்லாம் படங்களில் மட்டுமே அணிவார். ஆனால், நிஜத்தில் மிகவும் எளிமையாகவே இருப்பார். ப்ளாக் கலர் டெனிம் டீ சர்ட் மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் மட்டுமே அஜித் அன்றாடம் பயன்படுத்தும் உடைகளில் முக்கியமான இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது, ட்ரெண்டாக இருக்கும் உடைகள் குறித்து அவரிடம் சொல்லுவேன் பிடித்திருந்தால் அதனை அப்டேட் செய்து கொள்வார். என்று கூறியுள்ளார்.

கைது ஆவதை தவிர்க்க வேண்டுமென்றால் அமலாபால் இதனை செய்தே ஆகவேண்டும் நீதிமன்றம்