அஜித் இதைத்தான் இப்போதும் செய்துள்ளார் முன்பும் இதைத்தான் செய்தார் நெகிழும் ரசிகர்கள்

விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூட வெளியாகி விட்டது.

இந்த படத்திற்கான ஒன்லைன் ஸ்டோரியை மட்டும்தான் இயக்குனர் சிவா சொல்லி உள்ளாராம்.

முழு கதையின் வடிவத்தையும் அடுத்த ஜனவரி மாதம்தான் சொல்ல இருக்கிறாராம். பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

விவேகம் படத்தை எடுத்த சத்யஜோதி பிலிம்சுக்கே மீண்டும் படத்தை கொடுத்து விட்டார் அஜித். இது நடப்புக்காக அவர் செய்தது என்கிறது கோலிவுட் வட்டாரம். அஜித் விமர்சனங்களை எப்போதும் பெரிதாக எடுத்து கொள்வதில்லையாம்.

இதே போலத்தான் அன்றும் உறவுக்காக ஆரம்பம் படத்திற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினத்திற்கே கொடுத்தாராம் அஜித். இது தான் அஜித் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

 

ரசிகர்களை கவர வேலைக்காரன் படக்குழுவின் பலே திட்டம் நீங்க ரெடியா