2018 ல் எத்தனை விஜய்சேதுபதி படங்கள் ரிலீசாகவுள்ளன தெரியுமா

வருடத்திற்கு 6 முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்துவருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. வளர்ந்து வரும் நடிகர்களுக்கு தேவையான எண்ணிக்கைதான் இது என்றாலும். சமீபத்தில், விஜய் சேதுபதி அளித்திருந்த ஒரு பேட்டியில், அடிக்கடி படம் ரிலீஸ் செய்தால் என் மூஞ்சியை பார்பதற்கே போர் அடித்து விடும். அதனால், கொஞ்சம் இடைவெளி அதிகமாக விட்டு ரசிகர்களை எதிர்பார்க்கவைத்து படங்களை ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்று கூறினார்

இந்நிலையில், 2018-ல் விஜய் சேதுபதியின் முதல் ரிலீசாக “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படம் பொங்கலுக்கு வருகிறது.  இதனை தொடர்ந்து அடுத்த வருடம் ரிலீசாகவுள்ள விஜய் சேதுபதி படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். விஜய் சேதுபதி மூன்று வேடங்களில் நடித்துள்ள “96” திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகிறது. அதன் பிறகு, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, இடம் பொருள் ஏவல், சயீரா நரசிம்ம ரெட்டி, ஜூங்கா ஆகிய அனைத்து படங்களும் அடுத்த வருடமே அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

ஆக மொத்தம் 7 விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படங்கள் 2018-ம் ஆண்டில் வெளியாகவுள்ளன.

மீனாவை வருத்தப்பட வைத்த விஜய்!