டிவி விளம்பரங்களில் நடிப்பது பற்றி சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு

சென்னை: இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியை பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கினார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது,

தனி ஒருவன் படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகி மோகன் ராஜாவுக்கு போன் செய்து நாமும் இது போன்று படம் பண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசினேன். அவரும் சரி என்றார்.

நாங்கள் சந்தித்தபோது நாம் சேரும் படத்திற்கு வேலைக்காரன் என்று தலைப்பு வைக்கலாம் என்று முடிவு செய்தோம். இந்த மூலம் கிடைக்கும் அனைத்தும் மோகன்ராஜாவையே சேரும். மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்த படம் மூலம் நயன்தாராவுடன் முதன்முதலாக நடித்துள்ளேன். ஏகன் படத்தில் தான் அவரை முதலில் பார்த்தேன். நேரம் தவறாமல் இருப்பது தான் அவரின் வெற்றியின் ரகசியம்.

அனிருத் இல்லாமல் சிவகார்த்திகேயன் இல்லை என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். அதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். இது உங்களுக்கு 15வது படம், எனக்கு 11வது படம்.

இனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு சிறு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறேன். என்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார் சிவகார்த்திகேயன்.

சென்னையில் நூதன முறையில் பிச்சையெடுத்த போர்ச்சுகல் வாலிபர்: வைரலாகும் வீடியோ