கோ என்ற மெகா ஹிட் படத்தில் சிம்பு நடிக்க மறுத்தது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சிம்புவை சுற்றி தற்போதைக்கு பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரமாட்டார், டப்பிங் பேச வரமாட்டார் என அனைத்து பிரச்சனைகளையும் நேற்று AAA  தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் பேசிவிட்டார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் கோ. இப்படத்தில் ஜீவா, கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் முதலில் கமிட் ஆனது சிம்பு தான், அப்போது தமன்னாவை ஹீரோயினாக கமிட் செய்யுங்கள் என சிம்பு டார்ச்சர் கொடுத்தாராம்.

இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால் சிம்பு அந்த படத்திலிருந்து விலகினார் என்று ஒரு செய்தி அந்த சமயத்தில் பேமஸாக சுற்றி வந்தது.

சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிவிட்டது சிம்மம்! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் படியுங்கள்