2.0 துணை இயக்குனரின் பேஸ்புக் பதிவால் பதறிடித்துகொண்டு வீட்டிற்கே சென்று சம்பளத்தை நீட்டிய லைகா..!

2.0 பட தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று இணை இயக்குனர் முரளி மனோகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று இணை இயக்குனர் முரளி மனோகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது,

இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

“கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி” – “என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்” என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை என்று தெரிவித்தார்.

அஜித்குமாரின் 58-வது படத்தை இயக்கப்போவது இவர் தான்!